இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வகுப்பு எட்டு | அறிவுசால் ஔவையார் | மோ.தரணி குமார்

  வகுப்பு - 8 இயல் 7 - விரிவானம் அறிவுசால் ஔவையார் அதியமான் & ஔவையார் (பாகம் – 1) அதியமான் அரண்மனையில் ஔவையார் தங்கியிருந்தார். அன்று ஒரு நாள் , அதியமானும் தன் அமைச்சர் மற்றும் வீரர்களோடு காட்டுக்குச் சென்றனர். வந்த பிறகு , ஒளவையாரைப் பார்த்தபோது அவரைப் புகழச் செய்து , ஒன்றைச் சுவைக்க தந்தார். ஒளவையார் சுவைத்த கனி மிகவும் ருசியாக இருந்தது. அதன் பிறகுதான் ஒளவைக்குத் தெரியவந்தது அது நெல்லிக்கனியின் ஒரு வகை. அது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்த்து பழுக்கும் என்றும் , அதை வீரர்களால் ஏற இயலாததால் அதியமான் மலையுச்சிக்கு ஏறிப் பறித்ததாகவும் அமைச்சர் கூறினார். இதைக் கேட்டதும் ஒளவைக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது இவ்வளவு அரிதானது என்று முன்பே தெரிந்திருந்தால் அதியமானுக்கே தந்திருப்பேன் என்று ஒளவையார் கூறினார். அதற்கு அதியமான் ”என்னைப் போன்ற ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. அதனால்தான் நான் எதுவும் கூறாமல் நெல்லிக்கனியை உங்களிடம் அளித்து உண்ணச் செய்தேன்” எ...