இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீபாவளியும் நானும் – தமிழ் ஆர்வலர் செல்லக்குட்டி

  தீபாவளியும் நானும் – தமிழ் ஆர்வலர் செல்லக்குட்டி நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே எங்கள் ஊரான விழுப்புரத்திற்குக் கிளம்பிவிட்டோம். விழுப்புரம் நாங்கள் இருக்கும் வீட்டிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. என் அப்பா இரவு நேரத்தில் வேலைப் பார்ப்பதால் விடியக்காலை 5மணி அளவில் கிளம்பிவிட்டோம். அங்கு போக 2½ மணி நேரம் ஆகிவிட்டது. என் அப்பா, அம்மா, தாத்தா, நான் மற்றும் தங்கையுடன் மகிழ்ச்சியாகப் பயணப்பட்டோம். அங்கு என் அம்மா, சித்தி மற்றும் எனது பாட்டி பலகாரங்கள் சுட்டெடுத்தனர். முறுக்கு, சோமாசு, அச்சுமுறுக்கு, ரிப்பன் பக்கோடா மற்றும் அதிரசம் போன்ற பலகாரங்கள் சுட்டெடுக்கப்பட்டன. அவைச் சுவையாவும் இருந்தன. நவம்பர் 4, அன்று தீபாவளி. காலை 5 மணிக்கு எழுந்துவிட்டேன். பல் துலக்கி, குளித்துவிட்டு புது ஆடையை அணிந்தேன். பூசை அறையில் கடவுள் படமிடம் இலையை வைத்துப் படைத்துச் சாப்பிட்டோம். 100 வாலா பட்டாசை வெடித்து மற்ற வெடிகளை வெடித்தோம். அன்று இரவு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தைப் பார்த்துவிட்டு இரவு வெடிகளை வெடித்தோம். வானில் ஜொலித்தது. அன்றைய தீபாவளி கொண்டாட்டம் முடிந்தது. அங்க...

முறையீட்டுக் கடிதம் - தரணிக்குமார் வகுப்பு 8

படம்
  சாலையில் உள்ள  மழை நீரை வெளியேற்ற வேண்டி விண்ணப்பம். விடுநர்:                    க . மோகன்குமார்,                   எச்-125, நான்காவது தளம்,                   ரிவேரா, மேடவாக்கம்,                   சென்னை – 600 004. பெறுநர்:                      மாவட்ட ஆட்சியர்,                      மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,                      சென்னை - 600028. மதிப்பிற்குரிய ஐயா,...

அறிவொளி - கவிஞர் செ.நிறைமதி மதுரை

படம்
 

நேரிசை வெண்பா - கவிஞர் செ.நிறைமதி மதுரை

படம்
 கவிஞர் செ.நிறைமதி, மதுரை.

புத்தகம் ஓர் ஆயுதம் - கவிஞர் செ.நிறைமதி மதுரை

படம்
 

யாதும் ஊரே யாவரும் கேளிர் - கவிஞர் செ.நிறைமதி மதுரை

படம்
 

அறிவை விரிவு செய் - கவிஞர் செ.நிறைமதி மதுரை

படம்
 

ஆத்திச்சூடி - ஆறுசீர் விருத்தம் : கவிஞர் செ. நிறைமதி மதுரை

கவிஞர் செ. நிறைமதி மதுரை  ஆத்திச்சூடி - ஆறுசீர் விருத்தம்: மா மா மா மா மா காய் "சித்திரம் பேசேல்" அறுசீர் விருத்தம்: மா மா மா மா மா காய் பொய்கள் வடித்துப் புகழ்ச்சி தேடு மிழிவில் புணராதே! மெய்யாய்க் காட்டும் வீண்சொ லுரைத்து முரணில் வெதும்பாதே! நெய்யும் பொய்கள் நெடிய காலம் மண்ணில் நிலைக்காதே! செய்யும் செயலில் தெளியு முண்மை வேண்டும் செந்நாவில்!

வெண்பா - கவிஞர் செ.நிறைமதி மதுரை

  கவிஞர் செ.நிறைமதி வெண்பா: அன்னமோ புள்ளிமானோ ஆடும் மயிலினமோ கன்னல் மொழிபேசும் கன்னியோ - முன்சிரிப்புத் தேனூற  இன்பூறச் செவ்விதழ்ச் சேர்ந்திட வானூறும் மேகமாய் வந்து. கள்ளமில்லாச் தேன்சிரிப்பைக் கண்டு மகிழ்ந்திட .

தாலாட்டு - கவிஞர் செ.நிறைமதி மதுரை

 படைப்பாற்றல் திறன் - மரபுக் கவிதை கவிஞர் செ.நிறைமதி, மதுரை ஆசிரியப்பா :  தாலாட்டு! உலக மறிந்த உன்னத முதலிசை! நலமாய் மழலை நாளும் கேட்கும்! தாயும் பாடுவாள் தாலாட்டு மந்திரம்! சேயும் மயங்கும் சேலையின் வாசம்! ஏட்டில் எழுதா இனிய சொற்கள் பாட்டில் வந்து பண்ணினை மீட்டும்! செந்தே னாகச் செவியினில் பாயும்! சொந்தப் பந்தச் சூழலைப் பாடும்! இயற்கை எழிலை இனிதே காட்டும்! அயர்ந்துகண் மயங்கும் அன்பின் பாட்டிலே! நன்றியுடன் கவிஞர் செ.நிறைமதி மதுரை. பேசி : 90871 46277.

பொன்னூஞ்சல் - கவிஞர் நிறைமதி மதுரை

 படைப்பாற்றல் திறன் - மரபுக் கவிதை கவிஞர் செ.நிறைமதி, மதுரை. பொன்னூஞ்சல்! ................................ நிலைமண்டில ஆசிரியப்பா : ................................... மின்னல் கயிற்றில் வெள்ளி நிலவில் அன்பின் மனங்கள் ஆடும் ஊஞ்சல்! இன்பம் கூடியே இன்னல் கரைந்திடும் கன்னிளம் பருவக் காதல் ஊஞ்சல்! பாதிரி மணக்கும் பாவை கூந்தலில் மோதிடும் தென்றல் மோகம் கொண்டிட பனியில் நனைந்து பன்னீர் தெளித்திட கனிந்தே உருகும் காதல(ர்) உள்ளம்! ஆடிக் கொண்டே அழகு தொட்டிலில் பாடிக் களித்திடும் பைந்தமிழ் பாட்டில்... விரிப்பூங் கோங்கின் மீதினில் அமர்ந்து வரிக்குயில் மயங்கி மதுதமிழ்க் கேட்டிடும்! பொன்னூஞ் சலிலே பொங்குத் தமிழ்ப்பா கன்னலூற் றாக காதலில் தவழ்ந்திடும்! மேகம் சிந்திடும் வியர்வையில் நனைந்து... தேகம் குளிர்ந்து செந்தமிழ் போர்த்தி... பிரியாப் புணர்ச்சியில் பெருமிதம் கொண்டே அரியா சனத்திலே அமர்ந்தா டுமூஞ்சல்! பொங்கும் உணர்ச்சியில் பூத்துக் குலுங்கிச் சங்கப் பலகையில் சந்தம் பாடி தங்க ஊஞ்சலில் தமிழ்மகள் ஆடிட திங்கள் ஔியில் சிந்தும் சுவைத்திட... ஓருயி ராக உயிர்மெய் சேர்ந்தே ஈருயிரில் கலந்தது இன்பத் தமிழே! நன்ற...

குறள் வெண்பா - கவிஞர் நிறைமதி மதுரை

படைப்பாற்றல் திறன் - மரபுக் கவிதை கவிஞர் செ.நிறைமதி, மதுரை. குறள் வெண்பா :   முதலடி ஒன்று  பத்து ஈற்றடிகள் வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடத் தண்மை பொருந்தும் தமிழ். வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட எண்ணம் சிறக்கு மினிது. வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட மண்ணிலே வாழ்வு வனப்பு. வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட விண்ணும் புகழும் வியந்து. வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடக் கண்ணும் வனப்பாகும் காண். வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட விண்ணொளியாய் மின்னும் விளைவு. வெண்குறள் வள்ளவனின் மெய்ப்பொருளை ஓதிட நுண்ணறிவு பெற்றே நுகர். வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடப் பண்பி லொளிர்வாய்ப் படர்ந்து. வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடத் திண்ணமா யுள்ளத்தைத் தேற்று. வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடத்          தண்ணொளிக் காணுதல் சான்று. நன்றியுடன் கவிஞர் செ.நிறைமதி மதுரை. பேசி : 90871 46277.