இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’வாசிப்பும் நானும்’ | உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி | ஆதி வள்ளியப்பன்

படம்
 ’ வாசிப்பும் நானும்’          வாசிப்பும் நானும் என்னும் தலைப்பில் முதல் பதிவு.      இன்று நவம்பர் 12. பறவையியலாளர் சாலிம் அலியின் பிறந்த நாள். இந்நாளில் அவரை நினைவு கூர்வது தமிழ், இந்தியச் சமூகத்திற்கு நலம் பயக்கும் என்று நம்புகிறேன். அந்த வகையில் புக் பார் சில்ரன் மற்றும் ஓங்கில் கூட்டம் இணைந்து வெளியிட்டுள்ள, உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி என்னும் தலைப்பில் ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதிய நூலை சமீபத்தில் வாசித்தேன்.       அந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள சுவாரசியமான செய்திகளை உங்களோடு நான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். ஒன்பது வயதில் குருவிகளைச் சுடும் ஏர் கன் பிடித்துப் பின்னாளில், அந்தக் குருவிகளைப் பற்றியே எழுதுவதற்குப் பேனாவைத் தன் கையில் எடுத்துள்ளார் சாலிம் அலி. பறவையிலாளர் என்று அழைக்கப்பட்டார் என்பது இங்குக் கவனித்தக்கதாக உள்ளது.       கையில் துப்பாக்கியைப் பிடித்தலுக்கும் பேனா பிடித்தலுக்குமான இடைவெளியில் சாலிம் அலியின் பெருந்தேடல் பறவைகளைப் பற்றி...