இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித யந்திரம் - தரணிகுமார் வகுப்பு 8

மனித யந்திரம் மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். வேலையை நாள்தோறும் சரியாகச் செய்பவன், எல்லாவற்றையும் பொறுமையாகச் செய்பவன், சராசரியாக வேலை செய்பவன் எனப் பிரிக்கலாம். ஒரு இயந்திரத்தை ஆன் செய்தவுடன் அது நாள்தோறும் ஓடும். அதுபோல, இக்கதையில் இயந்திரம் செயல்படுவதைப்போல ஒருவர் இயங்குவதைப் பற்றிப் பார்க்கலாம். மீனாட்சிசுந்தரம் நாற்பத்தைந்து ஆண்டுகளாக அதே ஊரில் உள்ள ஒரு கடையில் குமாஸ்தாவாகப் பணிபுரிகிறார். அவர் கடையின் வரவுசெலவு கணக்குகளில் பெரிய சிக்கல்களைக்கூட தீர்த்துவைப்பார். ஆதலால், அவர் காலையில் கடைக்குச் சென்று வீட்டிற்கு திரும்ப இரவு பன்னிரண்டு மணி ஆகிவிடும். எந்தப் பருவநிலையிலும், காலையில் ஆற்றில் குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனமிட்டுக் கடைக்குச் செல்வார். மீனாட்சிசுந்தரம் மிகவும் சாதுவாகவும் எப்போதும் உண்மையை பேசுபவராகவும் இருப்பார். அவருக்கு ஆசை அதிகம். கொழும்புக்கு சென்று வேலை செய்து பணக்காரன் ஆக வேண்டும். மேலும், தனக்கென்று ஒரு கடை அதில் மற்றவர்களைக் கால்மேல் கால் போட்டு ஆணையிடுவது போன்ற ஆசைகள் பல உள்ளன. அவர் கடைவேலைகளை முடித்து வீட்டிற்கு செல்லும் வழ...