வகுப்பு எட்டு | அறிவுசால் ஔவையார் | மோ.தரணி குமார்

 வகுப்பு - 8

இயல் 7 - விரிவானம்

அறிவுசால் ஔவையார்

அதியமான் & ஔவையார் (பாகம் – 1)

அதியமான் அரண்மனையில் ஔவையார் தங்கியிருந்தார். அன்று ஒரு நாள், அதியமானும் தன் அமைச்சர் மற்றும் வீரர்களோடு காட்டுக்குச் சென்றனர். வந்த பிறகு, ஒளவையாரைப் பார்த்தபோது அவரைப் புகழச் செய்து, ஒன்றைச் சுவைக்க தந்தார். ஒளவையார் சுவைத்த கனி மிகவும் ருசியாக இருந்தது. அதன் பிறகுதான் ஒளவைக்குத் தெரியவந்தது அது நெல்லிக்கனியின் ஒரு வகை. அது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்த்து பழுக்கும் என்றும், அதை வீரர்களால் ஏற இயலாததால் அதியமான் மலையுச்சிக்கு ஏறிப் பறித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இதைக் கேட்டதும் ஒளவைக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது இவ்வளவு அரிதானது என்று முன்பே தெரிந்திருந்தால் அதியமானுக்கே தந்திருப்பேன் என்று ஒளவையார் கூறினார். அதற்கு அதியமான் ”என்னைப் போன்ற ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. அதனால்தான் நான் எதுவும் கூறாமல் நெல்லிக்கனியை உங்களிடம் அளித்து உண்ணச் செய்தேன்” எனக் கூறினார். இதன் மூலம் அதியமானின் மனிதாபிமானமும், தமிழ் மீதானப் பற்றும் ஒளவைக்குத் தெரியவந்தது.

மறுநாள் காலையில் ஒளவை அதியமானை மிகவும் கவலையுடன் காண்கிறார். அதியமானிடம் ஒளவையார் ஏன் கவலையாக உள்ளீர்கள் என்று கேட்டபோது, அதியமான் 'மன்னன் தொண்டைமான் நம் நாட்டின்மீது படையெடுத்து வருவதாக’ கூறினார். இதற்கு ஒளவையார் 'நீ தான் பார்க்காத போர்கள் இல்லையே. எத்தனையோ போர்கள் நீர் வென்றிருக்காய். போருக்கு அச்சமா?' என வினவினார். அப்போது அதியமானின் மனிதாபிமான பதிலைப் பார்த்து ஒளவை வியந்து விட்டார்.

ஒவ்வொரு போரின்போதும் எத்தனை உயிரிழப்புகள்? எவ்வளவு அழிவு? தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பிதங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர்வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறதுஎன்று கூறினார் அதியமான்.

இதற்கு ஔவையார் அதியமானுக்கு ஓர் உதவி செய்யலாம் எனச் சிந்தித்தார். அப்போது அவர், ‘நான் தொண்டைமானிடம் சென்று போரை நிறுத்த கூறுகிறேன்’. அதியமான் வேண்டாம் என்று கூறியும் போகத் துணிந்தார். ஔவை தொண்டைமானிடம் சென்றார்.

தொண்டைமான் & ஔவையார் (பாகம் – 2)

          தொண்டைமானின் அரசவையில் தொண்டைமானும் அவனது படைத்தளபதியும் அதியமானுக்கானப் போரைப் பற்றிக் கலந்துரையாடி இருந்தான். அப்போது படைத்தளபதி ஒரு செய்தி வந்தது. அது அதியமானைப் பற்றிய செய்தி. அதைப்பற்றித் தொண்டைமான் படைத் தளபதியிடம் கேட்டபோது படைத் தளபதி ‘புலவர் ஔவையாரை ஒற்றனாக அதியமான் அனுப்பியிருக்கிறான். போரை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி இருக்கிறான்’ என்றார்.

          இதைக் கேட்டத் தொண்டைமான் ’ஔவை வந்த பிறகு எனது ஆயுதக் கிடங்கை காட்டி அச்சத்தில் ஓடச் செய்யப் போறேன்’ என்றான். ஔவை வந்தபோது, அவரை வாழ்த்தி, நன்றாக வரவேற்பை தந்தான். இதன்வழியாக அவர் வருவதற்காக ஆவலாக தொண்டைமான் காத்துக்கொண்டிருந்தான் என்று ஔவைக்குத் தெரியவந்தது. அதோடு, ஔவையாரை ஆயுதக் கிடங்கைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றான்.

          ஆயுதக் கிடங்கிற்குச் சென்ற பிறகு அங்கு இருந்த ஆயுதங்களைப் பார்வையிட்ட ஔவைக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ ஆயுதங்கள், அவற்றில் எத்தனையோ வகைகள், அவற்றிலும் நிறைய எண்ணிக்கை. இதைப்பற்றி ஔவையும் புகழ்ந்தார். உரையாடிக்கொண்டே இருக்கும் போது தொண்டைமானுக்கு ஒரு கேல்வி எழும்பியது. 

          ’ஔவையே, அதியமானின் ஆயுதங்கள் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்களேன். அதைப்பற்றித் தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.’ என்று கோரிக்கை ஒன்றை எழுப்பினான். ஔவையும் இதைக் கேட்ட பிறகு கூற சம்மதித்தார். ‘உன் கிடங்கில் ஆயுதங்கள் அழகாக உள்ளவனப்போல் அங்கு இல்லை. எல்லாம் பழைய கருவிகளும், நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் கிடக்கின்றன’ என்று பதில் கூறினார்.

          இந்த ஒரு பதில் வந்த பிறகு தொண்டைமானின் முகம் மாறியது. இதைக் கவனித்த ஔவையார் தொண்டைமானிடம் கேட்டப்போது ”என் படைக்கருவிகளின் அளவையும் அழகையும் பாராட்டிக் கூறினீர்கள். அதைக் கேட்ட என் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. அடுத்ததாக நீங்கள் கூறிய செய்திதான் என்னைச் சிந்திக்க வைத்துவிட்டது.” என்றான்.

’என்னிடம் கருவிகள்தாம் மிகுதியாக உள்ளன. நான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களில் வெற்றி கண்டவன். அவனோடு போரிடுவது எத்தகைய அழிவைத் தரும் என்பதைப் புரிந்துகொண்டேன்’ என்றுப் புரிந்துகொண்டு ஔவையிடம் போர் வேண்டாம் என்று கூறுகிறான். அதோடு இதை அதியமானிடம் கூறுகிறார்.

-     முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar