இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறள் நீதிக்கதை - சிறந்த செல்வம் கல்வியே... - நூருல் ஏழாம் வகுப்பு

படம்
திருக்குறள் நீதிக்கதை - 2 சிறந்த செல்வம் கல்வியே... - நூருல் ஏழாம் வகுப்பு      ஓர் ஊரில் இரு சிறுவர்கள் இருந்தனர். இருவரும் இணையா பிரியா நண்பர்கள். அவ்விருவரும் அனைத்துப் பணிகளையும் ஒன்றாகச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், ஒருவன் பள்ளிக்குச் செல்வதைக் கடமையாக எண்ணித் தவறாது பள்ளி செல்பவன். மற்றொருவன் பள்ளிக்குச் செல்வதைக் கடனாகச் எண்ணிப் பள்ளி செல்லாதவன்.        சில  மாதங்களுக்குப் பிறகு, தேர்வு ஒன்று நடைபெற்றது. அதில், தவறாது பள்ளி செல்பவன்  தேர்ச்சியடைந்தான். அதேசமயத்தில், பள்ளி செல்லாதவன் தேர்வில் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சியடைந்தவன் நண்பனின் இல்லத்திற்குச் சென்றான். அப்போது, நண்பனின் தந்தை அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார். அதை அவன் நின்று கேட்க முற்பட்டான். அவர், தன் மகனைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்வதைக் கடனாக எண்ணினாய். ஆதலால்தான், இன்று நீ கள்ளனாக நிற்கிறாய். அழிவில்லாத செல்வம் கல்வி என்று அழுத்தமாகக் கூறினார். அதை, உன் நண்பன் பெற்றுள்ளான். எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி. அவன் வாழ்வில் இனி ஏறுமுகம். உனக்...

இன்றைய திருக்குறள் - மழலைகளின் மொழியைக் கொண்டாடுவோம்...

படம்
  இன்றைய திருக்குறள்   குழல் இனிது யாழ் இனிது தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்....  மழலைகளின் மொழிகளை இரசிப்போம். மனவளம் பெறுவோம். கொண்டாடத் தழைபடுவோம். 

தமிழ் (இரண்டாம் மொழி) இலக்கணம் - சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு - ஒரு மதிப்பெண் சான்று தருக - வினா வடிவம்

  சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு - தமிழ் (இரண்டாம் மொழி) இலக்கணம் - ஒரு மதிப்பெண்  -  சான்று   தருக -  வினா வடிவம்                                  இயல் 1 – கற்கண்டு -  எழு த்து, சொல். I. சான்று தருக . 1.     தனிமொழி ____________. அ) உரிச்சொல்      ஆ) பெயர்ச்சொல்          இ) இடைச்சொல்                    ஈ) வினைச்சொல் 2.     உயிரளபெடை ____________.       அ) இயல்பு ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி இ) பண்புத்தொகை புணர்ச்சி ஈ) உம்மைத்தொகை புணர்ச்சி 3.      மொழி கடை உயிரெளபெடை ____________. அ) வேனில்           ஆ) மழை     இ) குளிர்           ...

திருக்குறள் நீதிக் கதைகள் - பெருந்தன்மையோடு வாழப் பழகுவோம் - நூருல், ஏழாம் வகுப்பு.

படம்
  திருக்குறள் நீதிக் கதைகள்  - 1   பெருந்தன்மையோடு வாழப் பழகுவோம் . - நூருல், ஏழாம் வகுப்பு.      இரண்டு  வெவ்வேறு  நாடுகளில் வெவ்வேறான குணாம்சங்களைப் படைத்த இரு வேறு மன்னர்கள் ஆட்சி செய்தனர். இருவரும் சமமானத் தன்மையில் பலம் பொருந்தி அனைத்திலும் வெற்றி கண்டனர். ஆனால், அதில் ஒரு மன்னர் குறுக்கு வழியில் வெற்றிகளைச் சுவைத்துள்ளார். மற்றொரு மன்னர் அறத்தின் நெறியில் அனைத்தையும் அணுகுகினார். அதன்பால், இவர் மீது மதிப்பு உயர்ந்தது. ஆதலால், அனைவரும் அவரிடமே சென்றனர். அதனால், இவரது சாம்ராஜ்யம் விரிவானது. அதேமயத்தில், குறுக்கு வழியில் வெற்றிகளைக் கண்ட மன்னரின் மக்கள் இவரிடமே சென்று வாழத் தொடங்கினர். இவரது அரசையில் வாழவே பெரிதும் விரும்பினர்.      இதனை உணர்ந்த குறுக்குவழி மன்னர், தனது தவறைச்  சரி செய்ய எண்ணினார். அதனால், அறநெறியில் வெற்றி கண்ட மன்னரின் அரசவையில்  பணியாற்ற விரும்பினார். அம்மன்னனும் தன் அரசவையில் அவரை இணைத்துக் கொண்டார். இதனைக் கண்ட மக்கள்  வியந்து அம்மன்னனைப் போற்றி வாழ்த்தத் தயங்கவில்லை. அனைவரும் அவரை ஏற்றுக்கொண்...

ஓரெழுத்து ஒருமொழிகள் நாற்பத்திரண்டை எளிமையாக எழுதுவது எப்படி?

படம்
 ஓரெழுத்து ஒருமொழிகள் நாற்பத்திரண்டை எளிமையாக எழுதுவோம்.             மனனத்திலிருந்து விடுபட்டு எளிமையாக எழுத முனைவோம்.           பின்பு, சொல்லுக்கான பொருள்களை அறிவோம்.

உன்னைப் போல எவருமில்லை ..... முனைவர் பலராமன் சுப்புராஜ்

உன்னைப் போல எவருமில்லை  ... முனைவர் பலராமன் சுப்புராஜ் ஓராயிரம் உறவுகளைக் கடந்தாலும் உன்னைப் போல உறவு கொள்ள எவருமில்லை. தீராப் பகை கொண்ட வாழ்வினூடே பகை வெல்லும் போக்கு உன்னைத் தவிர எவரிடமுமில்லை. நாங்கள் முறுவலிக்க மறந்து வாழ்ந்ததுண்டு  உனது இதழ் புன்முறுவலை வீச மறந்ததேயில்லை. எங்களது மழலைகளை மாண்போடு வளர்க்க எத்தனித்ததில் உன் மாண்பே முன்நிற்கிறது என்று எவரும் அறியவில்லை உறவுகளின் உன்னதத்தை அறிய வைக்கவே நீ அவதரித்தாய் அத்திருநாளை நாங்கள் மறக்கவில்லை. கசக்கினோம் மூளையை மீண்டும் மீண்டும் அழுத்தமாக்கியது உன்னைப் போல எவருமில்லை என்று...   மகிழ்வோடு, நீ நேசிக்கும் உள்ளங்கள்...

தமிழ்மொழி பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் வினாத்தாள் வடிவம் 2020-2021

படம்
  தமிழ்மொழி  (006)   பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்  வினாத்தாள் வடிவம்    2020-2021

ஓரெழுத்து ஒருமொழிகள் அழகிலும் அழகு - புதுக் கவிதை முனைவர் பலராமன் சுப்புராஜ்

புதுக் கவிதை ஓரெழுத்து ஒருமொழிகள் அழகிலும் அழகு முனைவர் பலராமன் சுப்புராஜ் பண்ணிற்கு அழகு பா கண்ணிற்கு அழகு மை மழைக்கு அழகு பே மலைக்கு அழகு சே சொல்லுக்கு அழகு நா வில்லுக்கு அழகு கோ மனதிற்கு அழகு பை மணத்திற்கு அழகு பூ மனிதனுக்கு அழகு கை மனிதத்திற்கு அழகு நே அடர்த்திற்கு அழகு கா இடத்திற்கு அழகு தூ வெறுமைக்கு அழகு நோ பசுமைக்கு அழகு வை நாட்டிற்கு அழகு சோ வீட்டிற்கு அழகு ஆ பழமைக்கு அழகு போ புதுமைக்கு அழகு வா இல்லத்திற்கு அழகு ஐ இல்லத்தரசிக்கு அழகு மே. **************************

படைப்பாற்றலை வளர்ப்போம் ...

வணக்கம் தோழமைகளே!   வாசிப்போம் ... படைப்போம்... வலைப் பூங்காவிற்கு த்  தங்களை இனிதே வரவேற்கிறோம். அறிமுக உரை      தமிழ்மொழியைத் தெரிவு செய்து பயிலும் மாணவர்களுக்கான வலைக்களம் இது. அவர்களுக்குப் பயன்படும் வகையிலும், அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் இக்களத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்களின் வாசிப்பை ஆர்வப்படுத்தி, படைப்பாற்றலை ஊக்குவிக்குப்பதே இவ்வலைப் பூங்காவின் முதன்மையான நோக்கம்.         எமது சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் பயிலும் தமிழ் மாணவர்களின் பெரும் ஒத்துழைப்போடு இந்த வலைப் பூங்காவைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். அனைவருக்கும் பயன்படும் வகையில் படைப்பாற்றலை எம் மாணவர்கள் திறம்பட அளிக்க முனைவர் என்பதில் ஐயமில்லை. படைப்பாற்றல் திறனைத் தாங்களும் வளர்த்துக் கொள்ளும் வகையில் அது அமையும். மேலும், தாங்களும் இத்தளத்தில் பதிவிடலாம். பயன் பெறலாம். வளரலாம். அவ்வாய்ப்பினை நாங்கள் அளிக்கிறோம். ஆதலால், தொடர்ந்து எமது வலைப் பூங்காவிற்கு ஆதரவும் முழு ஒத்துழைப்பும் நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி.   வாருங்கள் செம்மொ...