புதிய புத்தகம் பேசுது | பாரதி புத்தகாலயம் - முனைவர் பலராமன் சுப்புராஜ்
புதிய புத்தகம் பேசுது சிறுபத்திரிக்கை உலகில், கருத்தாழம் குறையாமல், இருபத்தோர் ஆண்டுகளாக, மாதம் தவறாமல், வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ், புதிய புத்தகம் பேசுது. இலக்கியம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு மனிதக் கூறுகளின் முக்கிய உரையாடல்களை விவாதித்துப் பதிவு செய்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் அறிவியலாளருமான ஆயிஷா நடராஜன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன், யூமா வாசுகி, போன்ற பல எழுத்தாளர்களை ஆசிரியர் குழு உறுப்பினர்களாகத் தன்னகத்தே கொண்டுள்ளது புத்தகம் பேசுது. தோழர் நாகராஜன் ஆசிரியராகச் செயல்பட்டுக் கொண்டு வெளியிட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, புதிய புத்தகம் பேசுது ஆகப்பெரும் ஆளுமைகள் மேற்பார்வையில் வெளிவருகின்றது என்பதில் சிறிதும் ஐயமில்லை. சமரசமில்லா, சார்பில்லாச் சமகால அரசியல் பிரச்சினைகளை விவாதித்துச் செல்லும் தலையங்கத்தைத் தாங்கி வருகிறது. வாசகர்களை ஈர்க்கும் வகையில், நூலகாலஜி, மெட்ராஜ் நல்ல மெட்ராஜ், புத்தகக் காதல், நேர்காணல், நூல் அறிமுகம் உள்ளிட்ட சுவையா...