முன்நின்ற சொல்லும் முன்நில்லாச் சொல்லும் - தரணி சி.பி.எஸ்.இ மாணவர்.
முன்நின்ற சொல்லும் முன்நில்லாச் சொல்லும் - தரணி சி.பி.எஸ்.இ மாணவர். 2013, ஏப்ரல் மாதம், அப்போது கோடைகால விடுமுறை. பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அன்று பாலுவுக்கு அவனது அப்பா விலை உயர்ந்த ரிமோட் கன்ட்ரோல் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அவனது அப்பா ஒரு பணக்காரர். அவர் ரொம்ப நல்லவர். ஆனால், பாலு மற்றவர்களை பார்த்துக் கேலிகிண்டல் செய்து இ ரசிப்பான். இன்னொரு பக்கம் மகிழ். அவன் மிகவும் நல்ல பையன். ஆனால், அவனது குடும்பம் ஒரு வேலை சாப்பாடு சாப்பிடக்கூட பணம் இல்லாத நிலைமையில் இருக்கிறது. பாலு மற்றும் மகிழ் ஒரே பள்ளியில்தான் படிக்கின்றனர். பாலுக்குப் புதிதாய்க் கிடைத்த அந்த கார் மகிழனுக்கும் பிடித்து இருந்தது. மகிழ் தனது தந்தையிடம் செல்கிறான். மகிழ் தனது தந்தையிடம் ஒரு பொருள் வாங்கித் தாருங்கள் என்று இதுவரையிலும் கேட்டதே இல்லை. இருப்பினும் அவனுக்கு அந்த ரிமோட் கன்ட்ரோல் மீது தீரா ஆசையின் காரணமாக ரிமோட் கன்ட்ரோல் கார் வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் முடியாது என்று கூற முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் மகிழனின் 15வது பிறந்தநாள். அதனால், அவர் தான் ...