இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்றென்றும் நன்றியுடன்... தி.க.நேத்ரா, சி.பி.எஸ்.இ மாணவி.

  என்றென்றும் நன்றியுடன்... தி.க.நேத்ரா, சி.பி.எஸ்.இ மாணவி. “நண்பனே! ராகவா, நீ எனக்குச் செய்த உதவிக்கு நன்றி!... சொல்ல வார்த்தைகளே இல்லை’’ என்று எங்கோ ஒளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கால திரைப்படத்தில் கதாநாயகனின் உணர்ச்சி நிறைந்த குரலில்... இவ்வசனம் என் இரு செவிகளையும் துளையிட்டதால், சற்று அதனுள் பயணிக்க முற்பட்டோம். வாருங்கள்! இணைந்தே பயணிக்கலாம்!. இதில், ‘நன்றி’ என்னும் சொல்லும் ‘உதவி’ என்னும் சொல்லும் என்னை ஏதோ செய்தது. அதேசமயத்தில், இச்சொற்கள் நலிந்து வருவது சிந்திக்கக் கூடியதாகக் கருதினேன். இன்று நம்மில் பலருக்கு இக்கட்டான சூழலில் சிலர் உதவி இருப்பர். அவற்றில், நாம் ஒரு சிலருக்காவது உண்மையிலேயே நன்றி சொல்லி, அகமகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறோமா? என்று சிந்தித்தால் எஞ்சி நிற்பது என்ன என்பது தங்களுக்கே வெளிச்சம்.  ‘உதவி’ என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்று. உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ‘நன்றி’ சொல்ல வேண்டும். குறைபட்சம் நன்றி கலந்த சினேகப் புன்னகையாவது முகத்தில் பிரதிபலிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் மட்டுமல்ல, நமது மனம் இதமும் மகிழ்ச்சியில் து...

நூல் அறிமுகம் - எழுத்தாளர் எஸ்.ராவின் நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து (சிறார் புதினம்) - முனைவர் பலராமன் சுப்புராஜ்

படம்
நூல் அறிமுகம் - முனைவர் பலராமன் சுப்புராஜ்  எழுத்தாளர் எஸ்.ராவின்  நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து  (சிறார் புதினம்)            இந்நூலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர். தேவை ஒரு பேருந்து, யார் டிரைவர்?, பேருந்தின் வருகை, ஒரு மோதல், பேருந்தின் பறிமுதல், சேதுவின் அம்மா, பேருந்தின் காய்ச்சல், ரெட் டிராகனுடன் போட்டி என எட்டு அத்தியாயங்களாகக் கதை வார்க்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கென்று தனித்த பேருந்து ஒன்றை வாங்கி இயக்குவது என்பதே கதையின் மையம். கதைக் களம் கரிசல் நிலம். அருப்புக்கோட்டை மாவட்டம் மேக்கரை கிராமம். கதை மாந்தர்களாகப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன், முந்நாள், இந்நாள் மாணவர்கள், விக்டோரியா பள்ளி நிர்வாகி ராஜலெட்சுமி, டிரைவர் பாலகுரு, சரவண மூர்த்தி, டிரைவர் ஜேக்கப், துரைக்கண்ணு, கிராம பொதுமக்கள், முக்கிய கதைமாந்தராக நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து. பேருந்தை வாங்குவதில் உள்ள சிக்கல், குழப்பம், சுமை என்றான போராட்டத்துடன் கதை நகர்கிறது. வாங்கிய பேருந்தால் ஏற்பட்ட கடும்போட்டிகள், நெருக்கடிகள் அதன...