இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரத ரத்னா எம்.ஜி.ஆர் - மோ.தரணிகுமார், வகுப்பு எட்டு

  பாரத ரத்னா எம்.ஜி.ஆர்   அறிமுகம்:         எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.இராமச்சந்திரன் 1917 ஜனவரி 17 ஆம் நாள் கோபாலன் மற்றும் சத்தியபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாய் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். இவரது பெற்றோர் கேரளாவிலிருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இவரது இளமை வயதில் தன் தந்தையை இழந்தார். இந்தக் காரணத்தினால் அவரது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் குடியேரினார்கள். இளமைப் பருவம்:         கும்பகோணத்தில் உள்ள ஆனையடிப் பள்ளியில் எம்.ஜி.ஆர் படித்தார். வறுமையின் காரணமாகப் பள்ளியில் நண்பகல் உணவு உண்ணாமல் பசியுடன் படித்தார். ஒரு நாளைக்கு ஒரு வேலை சாப்பாடு சாப்பிடும் அளவிற்குதான் தினமும் வருமானம் கிடைத்தது. இந்தக் காரணத்தினால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் அவரது அண்ணனுடன் நாடகக் குழுவில் சேர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணம்:         நாடகக்குழுவில் சேர்ந்த எம்.ஜி.ஆர் சிறுசிறு வேடங்களில் நடித்தார். தனது நடிப்பாற்றலால் நாடகக்குழுவின...