பாரத ரத்னா எம்.ஜி.ஆர் - மோ.தரணிகுமார், வகுப்பு எட்டு
பாரத ரத்னா எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.இராமச்சந்திரன்
1917 ஜனவரி 17 ஆம் நாள் கோபாலன் மற்றும் சத்தியபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாய் இலங்கையில்
உள்ள கண்டியில் பிறந்தார். இவரது பெற்றோர் கேரளாவிலிருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.
இவரது இளமை வயதில் தன் தந்தையை இழந்தார். இந்தக் காரணத்தினால் அவரது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன்
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் குடியேரினார்கள்.
இளமைப்
பருவம்:
கும்பகோணத்தில் உள்ள ஆனையடிப்
பள்ளியில் எம்.ஜி.ஆர் படித்தார். வறுமையின் காரணமாகப் பள்ளியில் நண்பகல் உணவு உண்ணாமல்
பசியுடன் படித்தார். ஒரு நாளைக்கு ஒரு வேலை சாப்பாடு சாப்பிடும் அளவிற்குதான் தினமும்
வருமானம் கிடைத்தது. இந்தக் காரணத்தினால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் அவரது அண்ணனுடன்
நாடகக் குழுவில் சேர்ந்தார்.
எம்.ஜி.ஆரின்
திரைப்பயணம்:
நாடகக்குழுவில் சேர்ந்த எம்.ஜி.ஆர்
சிறுசிறு வேடங்களில் நடித்தார். தனது நடிப்பாற்றலால் நாடகக்குழுவின் முதன்மை நடிகராக
உயர்ந்தார். அதன்பின் திரைப்படத் துறையில் நடிக்கத் தொடங்கினார். நாடகம் போல் திரைப்படத்திலும்
சிறு வேடங்களில் நடித்தார். விரைவிலேயே கதாநாயகனாக உயர்ந்தார். அவர் நடிக்கும் கதாப்பாத்திரத்தின்
மூலம் கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். எனவே, அவரை மக்கள் “புரட்சித் தலைவர்”
என்றும் “மக்கள் திலகம்” என்றும் அழைத்தனர். மேலும், இந்திய அரசு, எம்.ஜி.ஆருக்கு ’பாரத்’
என்னும் பட்டத்தையும் அளித்தது.
மக்களுக்கான
தலைவர்:
எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின்
முதலமைச்சராகப் பதவியேற்றார். தனது சிறுவயது வறுமையின் கொடுமையை வைத்து மற்ற குழந்தைகளும்
பசியோடு படிக்கக்கூடாது எனச் சிந்தித்தார். அதனால், முன்னாள் முதலமைச்சரான காமராசரின்
மதிய உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தினார். பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை
வாரி வழங்கியதால் அவரை ”பொன்மனச் செம்மல்” என்று அழைத்தனர். எம்.ஜி.ஆர் மக்களுக்குப்
பெரும்பாலான சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தினார். உழவர்களின் கடன் தள்ளுபடி, பாடநூல்
வழங்கும் திட்டம், வீட்டு வசதித்திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்,
முதியோருக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினார்.
தமிழ்ப்
பற்று:
எம்.ஜி.ஆர் தமிழ் வளர்ச்சிக்காகப் பல்வேறு
பணிகள்
செய்தார். தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் செய்த தமிழ்
எழுத்துச் சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச்
சிரப்பாக நடத்தினார். 1000 ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தஞ்சையில்
(தஞ்சாவூர்) தொடங்கினார்.
முடிவுரை:
வறுமையின் கொடுமையைத் தாண்டி,
தனது திறன்களைப் பயன்படுத்தினார். அதனால் வாழ்வில் உயர்ந்தார். பின்பு, முதலமைச்சராகி
மக்களுக்காகச் சேவை செய்தார். மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்தான் புரட்சித் தலைவர்
எம்.ஜி.இராமச்சந்திரன். 1988-இல் இந்திய அரசு, எம்.ஜி.ஆருக்குப் ’பாரத ரத்னா’ விருதை
வழங்கிப் பெருமைப்படுத்தியது.
**********
கருத்துகள்
கருத்துரையிடுக