மனித யந்திரம் - தரணிகுமார் வகுப்பு 8
மனித யந்திரம்
மனிதர்களை
மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். வேலையை நாள்தோறும் சரியாகச் செய்பவன், எல்லாவற்றையும்
பொறுமையாகச் செய்பவன், சராசரியாக வேலை செய்பவன் எனப் பிரிக்கலாம். ஒரு இயந்திரத்தை
ஆன் செய்தவுடன் அது நாள்தோறும் ஓடும். அதுபோல, இக்கதையில் இயந்திரம் செயல்படுவதைப்போல
ஒருவர் இயங்குவதைப் பற்றிப் பார்க்கலாம்.
மீனாட்சிசுந்தரம்
நாற்பத்தைந்து ஆண்டுகளாக அதே ஊரில் உள்ள ஒரு கடையில் குமாஸ்தாவாகப் பணிபுரிகிறார்.
அவர் கடையின் வரவுசெலவு கணக்குகளில் பெரிய சிக்கல்களைக்கூட தீர்த்துவைப்பார். ஆதலால்,
அவர் காலையில் கடைக்குச் சென்று வீட்டிற்கு திரும்ப இரவு பன்னிரண்டு மணி ஆகிவிடும்.
எந்தப்
பருவநிலையிலும், காலையில் ஆற்றில் குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனமிட்டுக்
கடைக்குச் செல்வார். மீனாட்சிசுந்தரம் மிகவும் சாதுவாகவும் எப்போதும் உண்மையை பேசுபவராகவும்
இருப்பார். அவருக்கு ஆசை அதிகம். கொழும்புக்கு சென்று வேலை செய்து பணக்காரன் ஆக வேண்டும்.
மேலும், தனக்கென்று ஒரு கடை அதில் மற்றவர்களைக் கால்மேல் கால் போட்டு ஆணையிடுவது போன்ற
ஆசைகள் பல உள்ளன.
அவர்
கடைவேலைகளை முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ரயில்நிலையம் உள்ளது. அதில் ஐந்து
நிமிடம் மட்டும் ஒரு ரயில்வண்டி அங்கு நின்றுவிட்டுப் பின் தூத்துக்குடிக்குச் செல்லும்.
ஒரு நாள் அவருக்குப் கொழும்புவிற்குச் சென்று வேலைசெய்யலாம் என்று யோசனை வந்தது. கடையில்
இருக்கும் காசை எடுத்துவிட்டு புறப்பட்டார் செருப்புக்கூட அணியாமல்…
ஸ்டேஷனில்
டிக்கெட் எடுத்து ரயிலில் அமர்ந்தார். திடீரென காவல் அதிகாரியான, மீனாட்சிசுந்தரத்தின்
நண்பர், அவரைப் பார்த்து எங்குச் செல்கிறீர்கள்? எனக் கேட்டார். ஒரு சிலவற்றைச் சொல்லி
சமாளித்துவிட்டு ரயில் புறப்படும்போது ரயிலில் இருந்து இறங்கிவிட்டார். மீண்டும் கடைக்குச்
சென்று அவரது செலவுக் கணக்கை புத்தகத்தில் எழுதி கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குப்
புறப்பட்டார். வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை முதலாளியிடம் கடைச்சாவியை கொடுத்துவிட்டுச்
சென்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக