’வாசிப்பும் நானும்’ | உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி | ஆதி வள்ளியப்பன்

 ’வாசிப்பும் நானும்’ 


     வாசிப்பும் நானும் என்னும் தலைப்பில் முதல் பதிவு.

    இன்று நவம்பர் 12. பறவையியலாளர் சாலிம் அலியின் பிறந்த நாள். இந்நாளில் அவரை நினைவு கூர்வது தமிழ், இந்தியச் சமூகத்திற்கு நலம் பயக்கும் என்று நம்புகிறேன். அந்த வகையில் புக் பார் சில்ரன் மற்றும் ஓங்கில் கூட்டம் இணைந்து வெளியிட்டுள்ள, உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி என்னும் தலைப்பில் ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதிய நூலை சமீபத்தில் வாசித்தேன். 

    அந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள சுவாரசியமான செய்திகளை உங்களோடு நான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
ஒன்பது வயதில் குருவிகளைச் சுடும் ஏர் கன் பிடித்துப் பின்னாளில், அந்தக் குருவிகளைப் பற்றியே எழுதுவதற்குப் பேனாவைத் தன் கையில் எடுத்துள்ளார் சாலிம் அலி. பறவையிலாளர் என்று அழைக்கப்பட்டார் என்பது இங்குக் கவனித்தக்கதாக உள்ளது. 

    கையில் துப்பாக்கியைப் பிடித்தலுக்கும் பேனா பிடித்தலுக்குமான இடைவெளியில் சாலிம் அலியின் பெருந்தேடல் பறவைகளைப் பற்றியதாகவே இருந்துள்ளதாகப் பார்க்க முடிகிறது.

    அதில், ஒன்றுதான் தூக்கணாங் குருவி கூடு கட்டும் முறை. இக்குருவி கூடு கட்டும் முறையைத் தொழில்நுட்பம் பெரிதும் வளராத காலகட்டத்தில் அறிவியல்பூர்வமாக நுண்ணிய பார்வையில் விவரித்து கவனம் பெற்றவராகத் திகழ்ந்துள்ளார் சாலிம் அலி.

    ஆண் தூக்கணாங்குருவி மரத்தில் குடுவை வடிவில் கூடு கட்டும். அடிப் பகுதியில் கூட்டின் திறப்பு இருக்கும். இக்கூட்டைக் கட்டிக் கொண்டிருக்கும்போதே பெண் தூக்கணாங்குருவி பார்வையிடும். அக்கூடு சிறப்பாக இருந்தால் அக்குருவியுடன் ஜோடி சேரும். 

    பின்பு, அக்கூட்டை முழுமையாகக் கட்டி முடிக்கும். அந்தக் குருவி ஒரு கூட்டுடன் நிற்பதில்லை. 4, 5 கூடுகளைக் கட்டும். அனைத்திலும் பெண் குருவிகள் கட்டும் கூட்டை ஆய்வு செய்த பின் ஜோடி சேரும்.

    அவருக்குள் எழுந்த வினாக்களே பெருந் தேடலுக்கும் தொடர் ஆராய்ச்சிக்கும் வித்தாக மாறியுள்ளது. அந்த வினாக்கள் என்னவென்றால்,

1.ஒரு பறவை குறிப்பிட்ட பழத்தை மட்டும் ஏன் உண்கிறது?
2.ஒரு பறவை உயர்ந்த மரங்களில் வாழாமல் ஆற்றங்கரையில் வாழ்கிறது?
3.ஒரு பறவை ஏன் குறிப்பிட்ட வகையில் குரல் கொடுக்கிறது?.

    சாலிம் அலியின் தேடலில் எழுந்த நூல் ’The Book of Indian Bird’ . இது இந்திய பறவைகள் குறித்து எழுதப்பட்ட முதல் வழிகாட்டி நூல் என்னும் பெருமை  பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய கவனம் பெற்ற நூலாகத் திகழ்கிறது. இந்த நூலை ஜவர்கலால் நேரு வாசித்துவிட்டு தன் மகள் இந்திராவிற்குப் பரிசாக அளித்தார்.

    அடர்ந்த காட்டுப் பகுதி, மலைப்பகுதி, ஆற்றுப்பகுதி, பள்ளத்தாக்குப் போன்ற அச்சம் நிறைந்த பகுதிகளில் வெயில், மழை, குளிர் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் கழுத்தில் கண்நோக்கி, கையில் நோட்டு பேனாவோடு சாலிம் அலி பயணம் செய்துள்ளார் என்று பார்க்க முடிகிறது.

    சாலிம் அலி பற்றி நூலை உங்களோடு பகிர்ந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் மற்றொரு நூலோடு வாசிப்பும் நானும் பகுதியில் சந்திப்போம். நன்றி அன்பு வணக்கம்.

********


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar