வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்
வாக்கிய வகைகள் (பகுதி - 1)
தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்
வாக்கிய வகைகள்:
1.
செய்தி வாக்கியம்
2.
வினா வாக்கியம்
3.
விழைவு வாக்கியம்
4.
உணர்ச்சி வாக்கியம்
5.
தனி வாக்கியம்
6.
தொடர் வாக்கியம்
7.
கலவை வாக்கியம்
8.
தன்வினை வாக்கியம்
9.
பிறவினை வாக்கியம்
10.
செய்வினை வாக்கியம்
11.
செய்ப்பாட்டு வினை வாக்கியம்
12.
உடன்பாட்டு வாக்கியம்
13.
எதிர்மறை வாக்கியம்
14.
நேர்க்கூற்று வாக்கியம்
15.
அயற்கூற்று வாக்கியம்
செய்தி வாக்கியம்:
ஒரு செய்தியை கூறும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
எடுத்துக்காட்டு: இராஜேந்திர சோழனை கங்கை கொண்டான்
என்றும் கூறுவர்.
வினா வாக்கியம்:
வினா பொருள் தருகின்ற வாக்கியம் வினா வாக்கியம்.
எடுத்துக்காட்டு: தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது
யார்?
விழைவு வாக்கியம்:
ஒன்றை தெரிவிக்கும் வாக்கியம் விழைவு வாக்கியம்.
எடுத்துக்காட்டு: தார்ச்சாலை வேண்டி விண்ணப்பம்.
உணர்ச்சி வாக்கியம்:
உணர்ச்சிகளை உணர்த்தும் வாக்கியம் உணர்ச்சி வாக்கியம்
எடுத்துக்காட்டு: ஆ! என்ன ஒரு சுவை!
தனி வாக்கியம்:
ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாய்கள் வந்து ஒரே பயனிலையில்
கொண்டு முடியும் வாக்கியம் தனி வாக்கியம்
எடுத்துக்காட்டு: சந்தீப்பும் சூரியாவும் விளையாடினர்.
தொடர் வாக்கியம்:
ஒரு எழுவாய் பல பயனிலையோடு முடியும் வாக்கியம்
தொடர் வாக்கியம்.
எடுத்துக்காட்டு: பரத் விளையாடினான் ; வெற்றி
பெற்றான் ; கோப்பையை வென்றான்.
கருத்துகள்
கருத்துரையிடுக