புதிய புத்தகம் பேசுது | பாரதி புத்தகாலயம் - முனைவர் பலராமன் சுப்புராஜ்

 புதிய புத்தகம் பேசுது


சிறுபத்திரிக்கை உலகில், கருத்தாழம் குறையாமல், இருபத்தோர் ஆண்டுகளாக, மாதம் தவறாமல், வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ், புதிய புத்தகம் பேசுது.


இலக்கியம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு மனிதக் கூறுகளின் முக்கிய உரையாடல்களை விவாதித்துப் பதிவு செய்து வருகிறது.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் அறிவியலாளருமான ஆயிஷா நடராஜன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 

ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன், யூமா வாசுகி, போன்ற பல எழுத்தாளர்களை ஆசிரியர் குழு உறுப்பினர்களாகத் தன்னகத்தே கொண்டுள்ளது புத்தகம் பேசுது. 

தோழர் நாகராஜன் ஆசிரியராகச் செயல்பட்டுக் கொண்டு வெளியிட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, புதிய புத்தகம் பேசுது ஆகப்பெரும் ஆளுமைகள் மேற்பார்வையில் வெளிவருகின்றது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

சமரசமில்லா, சார்பில்லாச் சமகால அரசியல் பிரச்சினைகளை விவாதித்துச் செல்லும் தலையங்கத்தைத் தாங்கி வருகிறது.

வாசகர்களை ஈர்க்கும் வகையில், நூலகாலஜி, மெட்ராஜ் நல்ல மெட்ராஜ், புத்தகக் காதல், நேர்காணல், நூல் அறிமுகம் உள்ளிட்ட சுவையான உட்தலைப்புகளில் பேசுகிறது புத்தகம் பேசுது.   

ஆகப்பெரும் அறிவியலாளர்கள், இலக்கியவாதிகளின் நேர்காணலில் பல்வேறு வெளிப்படையான வினாக்களுடன், அவர்களது விரிவான பதிலளிப்புகளை நுண்மையுடன் ஒருங்கே அளிக்கின்றது புத்தகம் பேசுது..  

அறிவியலாளரும் சிறார் இலக்கிய வாதியுமான ஆயிஷா நடராஜன் எழுதும் தொடர்கள் புத்தகம் பேசுது வாசகர்களுக்குப் பல்வேறு திறப்புகளைக் கொண்டதாக அமைந்து வருகிறது.

புத்தகம் பேசுது இதழ் தங்களின் கைகளில் தவழ ஆயுள் சந்தாவிற்கு மூவாயிரத்து அறுநூறு ரூபாயும், ஆண்டு சந்தாவிற்கு முந்நூற்று அறுபது ரூபாயும், தனி இதழுக்கு முப்பது ரூபாயும் எனப் பாரதி புத்தகாலயம் அனைத்துக் கிளைகளிலும் கிடைக்கிறது.

தங்களின் படைப்புகள், நூல் அறிமுகம், புத்தக விமர்சனத்திற்கான புத்தகங்கள், விளம்பரங்கள் போன்றவை வரவேற்கப்படுகின்றன. 

புதிய புத்தகம் பேசுது இதழை வாசிப்போம் வளமான பார்வையை ஏற்படுத்திக் கொள்வோம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar