படைப்பாற்றலை வளர்ப்போம் ...

வணக்கம் தோழமைகளே! 

வாசிப்போம் ... படைப்போம்...

வலைப் பூங்காவிற்குத் தங்களை இனிதே வரவேற்கிறோம்.

அறிமுக உரை

    தமிழ்மொழியைத் தெரிவு செய்து பயிலும் மாணவர்களுக்கான வலைக்களம் இது. அவர்களுக்குப் பயன்படும் வகையிலும், அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் இக்களத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்களின் வாசிப்பை ஆர்வப்படுத்தி, படைப்பாற்றலை ஊக்குவிக்குப்பதே இவ்வலைப் பூங்காவின் முதன்மையான நோக்கம்.

       எமது சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் பயிலும் தமிழ் மாணவர்களின் பெரும் ஒத்துழைப்போடு இந்த வலைப் பூங்காவைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். அனைவருக்கும் பயன்படும் வகையில் படைப்பாற்றலை எம் மாணவர்கள் திறம்பட அளிக்க முனைவர் என்பதில் ஐயமில்லை. படைப்பாற்றல் திறனைத் தாங்களும் வளர்த்துக் கொள்ளும் வகையில் அது அமையும். மேலும், தாங்களும் இத்தளத்தில் பதிவிடலாம். பயன் பெறலாம். வளரலாம். அவ்வாய்ப்பினை நாங்கள் அளிக்கிறோம். ஆதலால், தொடர்ந்து எமது வலைப் பூங்காவிற்கு ஆதரவும் முழு ஒத்துழைப்பும் நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி. 

வாருங்கள் செம்மொழித் தமிழை 

வாசிப்போம்...படைப்போம்...

    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar