ஓரெழுத்து ஒருமொழிகள் அழகிலும் அழகு - புதுக் கவிதை முனைவர் பலராமன் சுப்புராஜ்

புதுக் கவிதை

ஓரெழுத்து ஒருமொழிகள் அழகிலும் அழகு

முனைவர் பலராமன் சுப்புராஜ்

பண்ணிற்கு அழகு பா

கண்ணிற்கு அழகு மை

மழைக்கு அழகு பே

மலைக்கு அழகு சே

சொல்லுக்கு அழகு நா

வில்லுக்கு அழகு கோ

மனதிற்கு அழகு பை

மணத்திற்கு அழகு பூ

மனிதனுக்கு அழகு கை

மனிதத்திற்கு அழகு நே

அடர்த்திற்கு அழகு கா

இடத்திற்கு அழகு தூ

வெறுமைக்கு அழகு நோ

பசுமைக்கு அழகு வை

நாட்டிற்கு அழகு சோ

வீட்டிற்கு அழகு

பழமைக்கு அழகு போ

புதுமைக்கு அழகு வா

இல்லத்திற்கு அழகு

இல்லத்தரசிக்கு அழகு மே.

**************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar