உன்னைப் போல எவருமில்லை ..... முனைவர் பலராமன் சுப்புராஜ்
உன்னைப் போல எவருமில்லை ...
முனைவர் பலராமன் சுப்புராஜ்
ஓராயிரம்
உறவுகளைக் கடந்தாலும்
உன்னைப் போல உறவு கொள்ள எவருமில்லை.
தீராப் பகை கொண்ட வாழ்வினூடே
பகை வெல்லும் போக்கு உன்னைத் தவிர எவரிடமுமில்லை.
நாங்கள் முறுவலிக்க மறந்து வாழ்ந்ததுண்டு
உனது
இதழ் புன்முறுவலை வீச மறந்ததேயில்லை.
எங்களது மழலைகளை மாண்போடு வளர்க்க எத்தனித்ததில்
உன் மாண்பே முன்நிற்கிறது என்று எவரும் அறியவில்லை
உறவுகளின் உன்னதத்தை அறிய வைக்கவே நீ அவதரித்தாய்
அத்திருநாளை
நாங்கள் மறக்கவில்லை.
கசக்கினோம் மூளையை மீண்டும் மீண்டும்
அழுத்தமாக்கியது உன்னைப் போல எவருமில்லை என்று...
மகிழ்வோடு,
நீ நேசிக்கும் உள்ளங்கள்...
கருத்துகள்
கருத்துரையிடுக