திருக்குறள் நீதிக்கதை - சிறந்த செல்வம் கல்வியே... - நூருல் ஏழாம் வகுப்பு
திருக்குறள் நீதிக்கதை - 2
சிறந்த செல்வம் கல்வியே...
- நூருல் ஏழாம் வகுப்பு
ஓர் ஊரில் இரு சிறுவர்கள் இருந்தனர். இருவரும் இணையா பிரியா நண்பர்கள். அவ்விருவரும் அனைத்துப் பணிகளையும் ஒன்றாகச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், ஒருவன் பள்ளிக்குச் செல்வதைக் கடமையாக எண்ணித் தவறாது பள்ளி செல்பவன். மற்றொருவன் பள்ளிக்குச் செல்வதைக் கடனாகச் எண்ணிப் பள்ளி செல்லாதவன்.
சில மாதங்களுக்குப் பிறகு, தேர்வு ஒன்று நடைபெற்றது. அதில், தவறாது பள்ளி செல்பவன் தேர்ச்சியடைந்தான். அதேசமயத்தில், பள்ளி செல்லாதவன் தேர்வில் தேர்ச்சியடையவில்லை. தேர்ச்சியடைந்தவன் நண்பனின் இல்லத்திற்குச் சென்றான். அப்போது, நண்பனின் தந்தை அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார். அதை அவன் நின்று கேட்க முற்பட்டான். அவர், தன் மகனைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்வதைக் கடனாக எண்ணினாய். ஆதலால்தான், இன்று நீ கள்ளனாக நிற்கிறாய். அழிவில்லாத செல்வம் கல்வி என்று அழுத்தமாகக் கூறினார். அதை, உன் நண்பன் பெற்றுள்ளான். எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி. அவன் வாழ்வில் இனி ஏறுமுகம். உனக்கோ இறங்குமுகம் என்றுரைத்தார். கல்வியைவிட சிறந்த செல்வம் வேறு ஒன்று இல்லை என்பதை உணர வைத்தார் நண்பனின் தந்தை. அப்போது, என்றோ வாசித்த வள்ளுவன் என்னுள் உதித்தான்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
எனும் குறளடி நினைவில் வந்து சென்றது.


கருத்துகள்
கருத்துரையிடுக