திருக்குறள் நீதிக் கதைகள் - பெருந்தன்மையோடு வாழப் பழகுவோம் - நூருல், ஏழாம் வகுப்பு.
திருக்குறள் நீதிக் கதைகள் - 1
பெருந்தன்மையோடு வாழப் பழகுவோம்.
- நூருல், ஏழாம் வகுப்பு.
இரண்டு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறான குணாம்சங்களைப் படைத்த இரு வேறு மன்னர்கள் ஆட்சி செய்தனர். இருவரும் சமமானத் தன்மையில் பலம் பொருந்தி அனைத்திலும் வெற்றி கண்டனர். ஆனால், அதில் ஒரு மன்னர் குறுக்கு வழியில் வெற்றிகளைச் சுவைத்துள்ளார். மற்றொரு மன்னர் அறத்தின் நெறியில் அனைத்தையும் அணுகுகினார். அதன்பால், இவர் மீது மதிப்பு உயர்ந்தது. ஆதலால், அனைவரும் அவரிடமே சென்றனர். அதனால், இவரது சாம்ராஜ்யம் விரிவானது. அதேமயத்தில், குறுக்கு வழியில் வெற்றிகளைக் கண்ட மன்னரின் மக்கள் இவரிடமே சென்று வாழத் தொடங்கினர். இவரது அரசையில் வாழவே பெரிதும் விரும்பினர்.
இதனை உணர்ந்த குறுக்குவழி மன்னர், தனது தவறைச் சரி செய்ய எண்ணினார். அதனால், அறநெறியில் வெற்றி கண்ட மன்னரின் அரசவையில் பணியாற்ற விரும்பினார். அம்மன்னனும் தன் அரசவையில் அவரை இணைத்துக் கொண்டார். இதனைக் கண்ட மக்கள் வியந்து அம்மன்னனைப் போற்றி வாழ்த்தத் தயங்கவில்லை. அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டனர்.
இக்கருத்தை வலியுறுத்தும் திருக்குறளானது,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
என்று வள்ளுவர் கூறுகிறார்.
துறவறவியல்
அதிகாரம் இன்னா செய்யாமை
குறட்பா எண் - 314.
***************

கருத்துகள்
கருத்துரையிடுக