மொழி முதல், இடை, இறுதியில் வரும், வரா உயிர் மற்றும் மெய் எழுத்துகள்

 

மொழி முதல், இடை, இறுதியில்

வரும், வரா எழுத்துகள்

லட்டு, ரப்பர், டெல்லி, தீபக், ஆத்விக், டிசம்பர், ஃபிரெஞ், டெங்கு, றெக்கை, க்ரியா, உரிங், உனக்கொ, எனக்கெ, னாங்கள், ணீங்கள் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

இவ்வெழுத்துகளையும் இது போலயுள்ள பல எழுத்துகளை எழுதுவதும், பேசுவதும் சரியானது என்று கருதி, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

தமிழ்மொழியில் உள்ள இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளில், எந்தெந்த எழுத்துகள் மொழியின் அதாவது சொல்லின் முதலில், இடையில், இறுதியில் வர வேண்டும், வரக் கூடாது என்கின்ற குழப்பமான மனநிலையோடு பயன்படுத்தி வருகிறோம் என்பது கண்கூடு.

இம்மனநிலைக்குள் அறியாமை, மயங்கொலிகள், பிறமொழி சொற்கள் ஆகியவற்றால் மயக்கம் கொள்கிறோம் என்பது மட்டும் தெளிவு.

அதன்பால் உயிர் எழுத்துகள் (12), மெய் எழுத்துகள் (18), உயிர்மெய் எழுத்துகள் (216), ஆய்த எழுத்து (1) ஆகிய தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மொழியின் (சொல்) முதலில், இடையில், இறுதியில் வரும், வாராத எழுத்துகளை எளிமையாக அடையாளப்படுத்திப் புரிந்து கொள்ள முயல்வோம்.

இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளும் சொல்லின் முதல் எழுத்தாகவோ, இடை எழுத்தாகவோ, இறுதி எழுத்தாகவோ வருவதில்லை என்பதான புரிதலோடு அணுகுவோம்.

இதனால், தமிழ்மொழியை எழுத்துப் பிழையின்றி எழுதவும், பிறமொழிச் சொற்களை அடையாளப்படுத்திக் கொண்டு எழுதவும் வாய்ப்பு ஏற்படும்.

 உயிர் எழுத்துகள் (12) :

மொழி முதலில் பன்னிரெண்டு உயிர் எழுத்துகளும் வரும். அவற்றைக் கீழே காண்போம்.

 

அம்மா

ஆற்றல்

இளை

ஈர்

உன்

ஊண்

எண்

ஏன்

ஐயா

ஒரு

ஓர்

ஔவை.

 

Ø  மொழி இடையில், இறுதியில் பன்னிரெண்டு உயிர் எழுத்துகளும் வராது.

 

Ø  அளபெடையாக வரும்போது மட்டும் மொழி இடையில், இறுதியில் வரும். சான்றாக

 

எடுப்பதூம்

நசை

 

மெய் எழுத்துகள் (18) :

 


Ø  மொழி முதலில் பதினெட்டு மெய் எழுத்துகளும் வராது.

 

Ø  மொழி இடையில் பதினெட்டு மெய் எழுத்துகளும் வரும்.

 

Ø  மொழி இறுதியில் பதினொன்று மெய் எழுத்துகள் மட்டும் வரும். அவை,


*******

 அடுத்தப் பதிவில் உயிர்மெய் எழுத்துகளில் மொழிமுதல், இடை, இறுதி எழுத்துகளைக் காணலாம். 

Ø  

 

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar