நூல் அறிமுகம் - எஸ்.ராவின் நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து (சிறார் புதினம்)
வாசிப்போம் மன வளம் பெறுவோம்
நூல் அறிமுகம்
நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து (சிறார் புதினம்)
நூலாசிரியர் - எஸ்.ராமகிருஷ்ணன்
நூல் பதிப்பு
தேசாந்திரி பதிப்பகம்
டிசம்பர் 2020 (முதல் பதிப்பு)
பக்கங்கள் - 72
விலை – ரூபாய் 70 /-
சமர்ப்பணம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு
அத்தியாயங்கள் - எட்டு
தேவை ஒரு பேருந்து
யார் டிரைவர்?
பேருந்தின் வருகை
ஒரு மோதல்
பேருந்தின் பறிமுதல்
சேதுவின் அம்மா
பேருந்தின் காய்ச்சல்
ரெட் டிராகனுடன் போட்டி
கதையின் மையம்
அரசு பள்ளிக்கென்று தனித்த பேருந்து ஒன்றை வாங்கி இயக்குவது என்பதே கதையின் மையம்.
கதைக்களம் - கரிசல் நிலம்
அருப்புக்கோட்டை மாவட்டம் மேக்கரை கிராமம்.
கதைமாந்தர்கள்
பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன்
முந்நாள், இந்நாள் மாணவர்கள்
விக்டோரியா பள்ளி நிர்வாகி ராஜலெட்சுமி
டிரைவர் பாலகுரு
சரவண மூர்த்தி
டிரைவர் ஜேக்கப்
துரைக்கண்ணு
கிராம பொதுமக்கள்
முக்கிய கதைமாந்தராக - தணிகை பள்ளி நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
கதைப் போக்கு...
பேருந்தை வாங்குவதில் உள்ள சிக்கல், குழப்பம், சுமை என்றான போராட்டத்துடன் கதை நகர்கிறது.
வாங்கிய பேருந்தால் ஏற்பட்ட கடும்போட்டிகள், நெருக்கடிகள் அதனால், ஏற்படும் விளைவுகள் கலந்த போராட்டக் களமாகக் கதைப் போக்கு உள்ளது.
வேடிக்கையான நிகழ்வுகள், மழைக்கால மகிழ்வுகள் என ஆரோக்கியமான பதிவுகள்.
அரசுப் பள்ளி x தனியார் பள்ளி
பெருந்தன்மை x ஆற்றாமை
வெற்றி x தோல்வி
முரண்களின் இயல்புகள்.
சில திருப்பங்கள் நிறைந்த கதைப்பின்னல் என்பதோடு சுவாரசியமாக யதார்த்தத்தோடு கதைப்போக்கு செறிவாக்கப்பட்டுள்ளது.
வாசிப்பு அனுபவம்
அரசுப் பள்ளி மாணவராக வாசித்த அனுபவத்தில், நாம் செல்ல வேண்டிய தூரம், ஆற்ற வேண்டிய பொறுப்பு அதிகம் என்பதை உணர்த்தினார் தலைமை ஆசிரியர் பழனியப்பன்.
அரசியல் மற்றும் தேவையற்ற வாய்ச் சவால்கள், குறுகிய மனப்பான்மை, சின்னப் புத்தி என இன்னும் பிற வளராத போக்கில் கவனம் செலுத்தாமல் மாணவர்களின் நலனே பிரதானம் என்று செயல்பட ஓர் உந்துதல்.
நமது இல்ல நூலகத்தில் இடம் பெற வேண்டிய நூல்.
வாசிப்பாளர்கள்
அரசுப் பள்ளி மாணவர்களாக இருந்து உயர்ந்த நிலைக்குச் சென்றவர்களும், ஆசிரியர்களாக ஆனவர்களும், ஒவ்வொரு மாணவர்களும் தவிர்க்காமல், தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.
*************


கருத்துகள்
கருத்துரையிடுக