மொழி முதல், இடை, இறுதியில் வரும், வரா உயிர்மெய் மற்றும் ஆய்த எழுத்துகள்

 

மொழி முதல், இடை, இறுதியில்  வரும், வரா உயிர்மெய் எழுத்துகள் :

உயிர்மெய் எழுத்துகள் (216) :

உயிர் எழுத்துகள் பன்னிரெண்டுடன் பதினெட்டு மெய் எழுத்துகள் இணைந்து உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன என்பதை அறிவோம்.


மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் (90) :

வல்லெழுத்துகள் - க், ச், த், ப் (4)

        மெல்லெழுத்துகள் - ந், ம் (2)

   ஆகிய ஆறு வரிசை எழுத்துகள் அனைத்தும் மொழி முதலில் வருபவை. அவற்றைக் கீழே காண்போம்.

வரிசை

 

க்

கா

கி

கீ

கு

கூ

கெ

கே

கை

கொ

கோ

கௌ

12

ச்

சா

சி

சீ

சு

சூ

செ

சே

சை

சொ

சோ

சௌ

12

த்

தா

தி

தீ

து

தூ

தெ

தே

தை

தொ

தோ

தௌ

12

ப்

பா

பி

பீ

பு

பூ

பெ

பே

பை

பொ

போ

பௌ

12

ந்

நா

நி

நீ

நு

நூ

நெ

நே

நை

நொ

நோ

நௌ

12

ம்

மா

மி

மீ

மு

மூ

மெ

மே

மை

மொ

மோ

மௌ

12

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

72


Ø மெல்லெழுத்துகள் – ங், ஞ் (2)

Ø இடையெழுத்துகள் – ய், வ் (2)

Ø ஆகிய வரிசைகளில் குறிப்பிட்ட சில எழுத்துகள் மட்டுமே மொழி முதலில் வருபவை. அவற்றைக் கீழே காண்போம்.

வரிசை

 

ங்

-

-

-

-

-

-

-

-

-

-

-

1

ஞ்

ஞா

-

-

-

-

ஞெ

-

-

ஞொ

-

-

4

ய்

யா

-

-

யு

யூ

-

-

-

-

யோ

யௌ

6

வ்

வா

வி

வீ

-

-

வெ

வே

வை

-

-

-

7

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

18

 

என்னும் எழுத்தை நினைவில் வைத்துக்கொண்டு வரைபடமாக வரைந்தால், எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

 

மொழி முதலில் வராத உயிர்மெய் எழுத்துகள் (123) :

 

Ø  வல்லெழுத்துகள் - ட், ற் (2)

Ø  மெல்லெழுத்துகள் – ண், ன் (2)

Ø  இடையெழுத்துகள் – ர், ல், ழ், ள் (4)

ஆகிய எட்டு வரிசை எழுத்துகள் அனைத்தும் மொழி முதலில் வராது. அவற்றைக் கீழே காண்போம்.

   வரிசை

 

ட்

டா

டி

டீ

டு

டூ

டெ

டே

டை

டொ

டோ

டௌ

12

ற்

றா

றி

றீ

று

றூ

றெ

றே

றை

றொ

றோ

றௌ

12

ண்

ணா

ணி

ணீ

ணு

ணூ

ணெ

ணே

ணை

ணொ

ணோ

ணௌ

12

ன்

னா

னி

னீ

னு

னூ

னெ

னே

னை

னொ

னோ

னௌ

12

ர்

ரா

ரி

ரீ

ரு

ரூ

ரெ

ரே

ரை

ரொ

ரோ

ரௌ

12

ல்

லா

லி

லீ

லு

லூ

லெ

லே

லை

லொ

லோ

லௌ

12

ழ்

ழா

ழி

ழீ

ழு

ழூ

ழெ

ழே

ழை

ழொ

ழோ

ழௌ

12

ள்

ளா

ளி

ளீ

ளு

ளூ

ளெ

ளே

ளை

ளொ

ளோ

ளௌ

12

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

93


Øமெல்லெழுத்துகள் – ங், ஞ் (2)

   இடையெழுத்துகள் – ய், வ் (2)

Ø ஆகிய வரிசைகளில் மொழிமுதலில் வரும் சில உயிர்மெய் எழுத்துகளைத் தவிர்த்து மீதமுள்ள எழுத்துகள் அனைத்தும் மொழி முதலில் வராது. அவற்றைக் கீழே காண்போம்.

 

வரிசை

 

ங்

-

ஙா

ஙி

ஙீ

ஙு

ஙூ

ஙெ

ஙே

ஙை

ஙொ

ஙோ

ஙௌ

11

ஞ்

-

-

ஞி

ஞீ

ஞு

ஞூ

-

ஞே

ஞை

-

ஞோ

ஞௌ

8

ய்

-

-

யி

யீ

-

-

யெ

யே

யை

யொ

-

-

6

வ்

-

-

-

-

வு

வூ

-

-

-

வொ

வோ

வௌ

5

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

30

 

மொழி இடையிலும், இறுதியிலும் 216 உயிர்மெய் எழுத்துகளும் வரும்.

 

மொழி இறுதியில் வராத உயிர்மெய் எழுத்துகள் (47) :

Ø  ஙகர வரிசை எழுத்துகள் மொழி இறுதியில் வராது.

 

வரிசை

 

ங்

ஙா

ஙி

ஙீ

ஙு

ஙூ

ஙெ

ஙே

ஙை

ஙொ

ஙோ

ஙௌ

12

 

Ø  எகர வரிசை எழுத்துகள் மொழி இறுதியில் வராது.

 

 

க்

ங்

ச்

ஞ்

ட்

ண்

த்

ந்

ப்

ம்

ய்

ர்

ல்

வ்

ழ்

ள்

ற்

ன்

 

கெ

ஙெ

செ

ஞெ

டெ

ணெ

தெ

நெ

பெ

மெ

யெ

ரெ

லெ

வெ

ழெ

ளெ

றெ

னெ

18

 

Ø  ஒகர வரிசையில் நொ தவிர பிற எழுத்துகள் மொழி இறுதியில் வராது.

 

 

க்

ங்

ச்

ஞ்

ட்

ண்

த்

ந்

ப்

ம்

ய்

ர்

ல்

வ்

ழ்

ள்

ற்

ன்

 

கொ

ஙொ

சொ

ஞொ

டொ

ணொ

தொ

-

பொ

மொ

யொ

ரொ

லொ

வொ

ழொ

ளொ

றொ

னொ

17

Ø  நொ மட்டும் ஓரெழுத்து ஒருமொழியாக வந்து துன்பம் என்னும் பொருளைத் தருகிறது.

 

ஆய்த எழுத்து (1) :

Ø  மொழி முதலில் ஆய்தம் எழுத்து வராது.

Ø  மொழி இடையில் மட்டும் வரும். சான்றாக

கு

து

    மொழி இறுதியில் வராது.

                 *******

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar