புதுக் கவிதை - காடு - இளம் கவிஞர் ராஜ்கமல்.
புதுக்கவிதை - காடு
- இளம்கவிஞர் ராஜ்கமல் சி.பி.எஸ்.இ மாணவர்
ஆதிமனிதன் பிறந்த காடு
ஆதவன் அடையும் அடர்ந்த காடு
பல்லுயிர்கள் வாழும் காடு
நல்லுயிர்கள் நாடும் காடு
உயிரையும் உலகையும் காக்கும் காடு
இயற்கைத் தாயின் செல்லப்பிள்ளை என்னும் கர்வம் கொண்ட காடு
காடுகள் இல்லா நாடுகள் ஏது
காடுகள் தானே உயிர்களின் கூடு
மலைகளின் அருவி உந்தன் ஊற்று
குயில்கள் கீதம் உந்தன் பாட்டு
மான்களும் புலிகளும் உலவும் காடு
அதனால் நாசம் நிகழுமா கூறு
மனிதன் நுழைந்தால் அலறும் காடு
அவனால் ஏற்படும் நாசத்தைத் தடுப்பது யாரு
காடுகளின் வேள்வியே உலகைக் காப்பது
நமதின் நோக்கமே காடுகளைக்
காப்பது... காப்பது... காப்பது...
************
கருத்துகள்
கருத்துரையிடுக