முன்நின்ற சொல்லும் முன்நில்லாச் சொல்லும் - தரணி சி.பி.எஸ்.இ மாணவர்.

 முன்நின்ற சொல்லும் முன்நில்லாச் சொல்லும்

-      தரணி சி.பி.எஸ்.இ மாணவர்.


2013, ஏப்ரல் மாதம், அப்போது கோடைகால விடுமுறை. பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அன்று பாலுவுக்கு அவனது அப்பா விலை உயர்ந்த ரிமோட் கன்ட்ரோல் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அவனது அப்பா ஒரு பணக்காரர். அவர் ரொம்ப நல்லவர். ஆனால், பாலு மற்றவர்களை பார்த்துக் கேலிகிண்டல் செய்து
ரசிப்பான்.

இன்னொரு பக்கம் மகிழ். அவன் மிகவும் நல்ல பையன். ஆனால், அவனது குடும்பம் ஒரு வேலை சாப்பாடு சாப்பிடக்கூட பணம் இல்லாத நிலைமையில் இருக்கிறது. பாலு மற்றும் மகிழ் ஒரே பள்ளியில்தான் படிக்கின்றனர். பாலுக்குப் புதிதாய்க் கிடைத்த அந்த கார் மகிழனுக்கும் பிடித்து இருந்தது. மகிழ் தனது தந்தையிடம் செல்கிறான்.

மகிழ் தனது தந்தையிடம் ஒரு பொருள் வாங்கித் தாருங்கள் என்று இதுவரையிலும் கேட்டதே இல்லை. இருப்பினும் அவனுக்கு அந்த ரிமோட் கன்ட்ரோல் மீது தீரா ஆசையின் காரணமாக ரிமோட் கன்ட்ரோல் கார் வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் முடியாது என்று கூற முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் மகிழனின் 15வது பிறந்தநாள். அதனால், அவர் தான் சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்து வைக்கத் தொடங்கினார்.

மகிழனின் பிறந்தநாளும் வந்தது. அவனுக்கு வியப்பாக இருந்தது. ஏன் என்றால், தனது தந்தை அவனுக்கு ரிமோட் கன்ட்ரோல் கார் வாங்கிக் கொடுத்தது. அன்று அவன் பாலு மற்றும் அவனது நண்பர்களிடம் விளையாடும்போது அவனது புதிய காரை காட்டினான். எல்லோரும் அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி, அந்த கார் நன்றாக இருக்கிறது என்று கூறினர்.

அடுத்த நாள், பாலு விளையாட வெளியே சென்றான். அப்போது அவன் தன் நண்பர்களிடம் மகிழனின் காரை பற்றி அவன் இல்லாதபோது கொச்சையாகப் பேசினான். அது மகிழனுக்குத் தெரியவந்தது. அப்போது அவன் மனம் உடைந்தது. இதைக் கவனித்த ஒரு முனிவர் பாலுவுக்கு ஒரு சாபம் கொடுத்தார். அது பாலுவுக்குத் தெரியாது.

மே மதம் தொடங்கியது, பாலு வெளியே செல்ல, எல்லோரும் அவனைப் பற்றித் தவறு தவறாகவே பேசிக்கொண்டனர். அது அவனுக்குத் தெரிந்த பின் அந்த ஊருக்கு வந்திருந்த முனிவரைச் சந்திக்கச் செல்கிறான்.

பாலுவும் முனிவர் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டான். அவனைப் பற்றி தவறு தவறாகப் புறங்கூறின கதையைக் கூறினான். அச்சமயம் பாலுவின் தந்தை அந்தப் பக்கமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். பாலு ஏன் முனிவரைச் சந்திக்க வேண்டும்? ஏதாவது பிரச்சனையா? என்று நினைத்துக்கொண்டு அந்த முனிவரிடம் அவர் செல்கிறார்.

அப்போது, என்னவென்று அந்த முனிவரிடம் கேட்டார். பாலு செய்த தவறைக் கூறினார். இதைப் பாலுவின் தந்தையால் நம்ப முடியவில்லை. இப்பிரச்சனையைத் தீர்க்க இவர்கள் பாலுவை மகிழனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பாலுவின் தந்தை, பாலு மற்றும் முனிவர் மகிழனின் வீட்டை அடைந்தனர். அப்போது பாலுவின் தந்தை மகிழனை அழைத்தார். பாலுவிடம் சொல்லி மகிழனிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். அதற்குப் பாலு மறுத்தான். அவர் இன்னொருமுறை கூறிய பின் அவன் மன்னிப்புக் கேட்டான். மகிழனும் அவனை மன்னித்து விட்டான். அதன் பின் முனிவரின் சாபம் நீங்கியது. மகிழனிக்கு ஒரு வரம் கொடுத்தார் அந்த முனிவர். ஒரு ஜாடி நிறைய தங்க நாணயங்கள். இதை வைத்து மகிழ்ச்சியா இருங்கள் என்று வாழ்த்தினார். அவர்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்தக் கதை மற்றவர்களைப் பற்றித் தவறாகக் கொச்சைப்படுத்திப் பேசக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. நாம் ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். அனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது. இதைத்தான் திருவள்ளுவர்,

"கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க

 முன்இன்று பின்நோக்காச் சொல். " 

(அதிகார எண் 19 - புறங்கூறாமை - குறள் எண் - 184)


*****முற்றும்*****

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar