குறள் வெண்பா - கவிஞர் நிறைமதி மதுரை
படைப்பாற்றல் திறன் - மரபுக் கவிதை
கவிஞர் செ.நிறைமதி, மதுரை.
குறள் வெண்பா :
முதலடி ஒன்று
பத்து ஈற்றடிகள்
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடத்
தண்மை பொருந்தும் தமிழ்.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட
எண்ணம் சிறக்கு மினிது.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட
மண்ணிலே வாழ்வு வனப்பு.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட
விண்ணும் புகழும் வியந்து.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடக்
கண்ணும் வனப்பாகும் காண்.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிட
விண்ணொளியாய் மின்னும் விளைவு.
வெண்குறள் வள்ளவனின் மெய்ப்பொருளை ஓதிட
நுண்ணறிவு பெற்றே நுகர்.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடப்
பண்பி லொளிர்வாய்ப் படர்ந்து.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடத்
திண்ணமா யுள்ளத்தைத் தேற்று.
வெண்குறள் வள்ளுவனின் மெய்ப்பொருளை ஓதிடத்
தண்ணொளிக் காணுதல் சான்று.
நன்றியுடன்
கவிஞர் செ.நிறைமதி
மதுரை.
பேசி : 90871 46277.
கருத்துகள்
கருத்துரையிடுக