முறையீட்டுக் கடிதம் - தரணிக்குமார் வகுப்பு 8
சாலையில் உள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டி விண்ணப்பம்.
விடுநர்:
க.மோகன்குமார்,
எச்-125, நான்காவது தளம்,
ரிவேரா, மேடவாக்கம்,
சென்னை – 600 004.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சென்னை - 600028.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்:
சாலையில் உள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டி விண்ணப்பம்.
வணக்கம். நான் மேல் உள்ள முகவரியில் வசித்து வருகிறேன். நான் வாழும் அடுக்ககத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்கின்றனர். சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் சாதாரணமாகவே தண்ணீர் தேங்கும். கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதாலும், நான் வாழும் இடத்தின் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டதாலும் சாலையில் வெள்ளம்போலத் தண்ணீர் ஓடுகிறது. இதனால், யாராலும் உள்ளேயும் வெளியேயும் வந்துபோக முடியவில்லை. அவர்களுக்கு வேண்டிய சாப்பாடு, மளிகைப் பொருட்கள் மற்றும் உடல்நலம் மோசமாக இருப்பவர்கள் மருத்துவமனைக்குப் போக இயலவில்லை. இதுபோலக் கனமழைப் பெய்தால், எங்கள் வண்டிகளைச் சேதப்படுத்தும். வாகனங்களைச் சரிசெய்வதற்காக அதிக பணம் செலவாகும். எங்களைப் போல இன்னும் சிலரது நிலைமை ரொம்ப மோசமாக இருக்கின்றன. எங்கள் அடுக்ககத்தைக் காப்பாற்றும் விதத்தில் சாலையில் தேங்கி இருக்கும் நீரை வெளியேற்றுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நாள்:14.11.2021 இப்படிக்கு,
இடம்: மேடவாக்கம் தங்கள்
உண்மையுள்ள,
க.மோகன்குமார்.
கருத்துகள்
கருத்துரையிடுக