தாலாட்டு - கவிஞர் செ.நிறைமதி மதுரை

 படைப்பாற்றல் திறன் - மரபுக் கவிதை

கவிஞர் செ.நிறைமதி, மதுரை

ஆசிரியப்பா : தாலாட்டு!

உலக மறிந்த உன்னத முதலிசை!

நலமாய் மழலை நாளும் கேட்கும்!

தாயும் பாடுவாள் தாலாட்டு மந்திரம்!

சேயும் மயங்கும் சேலையின் வாசம்!

ஏட்டில் எழுதா இனிய சொற்கள்

பாட்டில் வந்து பண்ணினை மீட்டும்!

செந்தே னாகச் செவியினில் பாயும்!

சொந்தப் பந்தச் சூழலைப் பாடும்!

இயற்கை எழிலை இனிதே காட்டும்!

அயர்ந்துகண் மயங்கும் அன்பின் பாட்டிலே!


நன்றியுடன்

கவிஞர் செ.நிறைமதி

மதுரை.

பேசி : 90871 46277.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar