தீபாவளியும் நானும் – தமிழ் ஆர்வலர் செல்லக்குட்டி

 

தீபாவளியும் நானும்

– தமிழ் ஆர்வலர் செல்லக்குட்டி


நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே எங்கள் ஊரான விழுப்புரத்திற்குக் கிளம்பிவிட்டோம். விழுப்புரம் நாங்கள் இருக்கும் வீட்டிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. என் அப்பா இரவு நேரத்தில் வேலைப் பார்ப்பதால் விடியக்காலை 5மணி அளவில் கிளம்பிவிட்டோம். அங்கு போக 2½ மணி நேரம் ஆகிவிட்டது.

என் அப்பா, அம்மா, தாத்தா, நான் மற்றும் தங்கையுடன் மகிழ்ச்சியாகப் பயணப்பட்டோம். அங்கு என் அம்மா, சித்தி மற்றும் எனது பாட்டி பலகாரங்கள் சுட்டெடுத்தனர். முறுக்கு, சோமாசு, அச்சுமுறுக்கு, ரிப்பன் பக்கோடா மற்றும் அதிரசம் போன்ற பலகாரங்கள் சுட்டெடுக்கப்பட்டன. அவைச் சுவையாவும் இருந்தன.

நவம்பர் 4, அன்று தீபாவளி. காலை 5 மணிக்கு எழுந்துவிட்டேன். பல் துலக்கி, குளித்துவிட்டு புது ஆடையை அணிந்தேன். பூசை அறையில் கடவுள் படமிடம் இலையை வைத்துப் படைத்துச் சாப்பிட்டோம். 100 வாலா பட்டாசை வெடித்து மற்ற வெடிகளை வெடித்தோம். அன்று இரவு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தைப் பார்த்துவிட்டு இரவு வெடிகளை வெடித்தோம். வானில் ஜொலித்தது. அன்றைய தீபாவளி கொண்டாட்டம் முடிந்தது.

அங்குச் சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இரவில் வெடித்த பட்டாசுதான் என்னை மகிழ்ச்சியாக்கியது. இந்தத் தீபாவளியில் அதிகமான பட்டாசுகள் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு தீபாவளி இந்தளவு இல்லை.


*****************

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar