ஆத்திச்சூடி - ஆறுசீர் விருத்தம் : கவிஞர் செ. நிறைமதி மதுரை
கவிஞர் செ. நிறைமதி மதுரை
ஆத்திச்சூடி - ஆறுசீர் விருத்தம்:
மா மா மா மா மா காய்
"சித்திரம் பேசேல்"
அறுசீர் விருத்தம்:
மா மா மா மா மா காய்
பொய்கள் வடித்துப் புகழ்ச்சி தேடு மிழிவில் புணராதே!
மெய்யாய்க் காட்டும் வீண்சொ லுரைத்து முரணில் வெதும்பாதே!
நெய்யும் பொய்கள் நெடிய காலம் மண்ணில் நிலைக்காதே!
செய்யும் செயலில் தெளியு முண்மை வேண்டும் செந்நாவில்!
கருத்துகள்
கருத்துரையிடுக