மழைச்சோறு, வகுப்பு - 8, தமிழ்ப் பாடம், மோ.தரணிகுமார்

 

மழைச்சோறு

             வாளியில் கரைத்த அரிசி மாவை, வாசலில் பெண்கள் கோலம் போட்டனர். அதைக் கரைக்க மழை வரவில்லை. பானையில் கரைத்த மாவிலும் கோலம் போட்டனர். அதைக் கரைக்கவும் மழை வரவில்லை என்று தவித்தனர்.

மக்கள் கற்கள் இல்லாத நிலத்தில் கடலைச்செடி நட்டனர். அங்கு மழைப் பொழியாததால் அது வாடியது. முற்கள் இல்லாத இடத்தில் நட்ட முருங்கைச்செடிக் கூட வாடியது.

  கருவேலங்காட்டில் உள்ள கருவேலமரங்கள் மழையில்லாததால் பூக்கவில்லை. காட்டுமல்லிகள் மழையின்மைக் காரணத்தால் பூக்கவில்லை. இவையெல்லாம் காததூரம் வரைக்கும்கூட மணக்கவில்லை.

மானத்தை நம்பி மக்கள் அனைவரும் அதே வறட்சியான நிலத்தில் வாழ்ந்தனர். கலப்பையை வைத்து உழுத நிலத்தை நீர்ப் பாய்ச்ச மழை வரவில்லை. இது மக்களுக்கு வருத்தமாக இருந்தது.

     கனமழை பெய்யவில்லை. அதனால் மக்கள் கதறி அழுதனர். அழுதும்கூட மழை வரவில்லை. இப்பூமி வறண்டும் அவ்வூர் தெய்வமான மாரியாத்தா இரக்கம் காட்டவில்லை. அவர்கள் வாழ்வதற்கு வனவாசம் போவதாகத் திட்டமிட்டனர்.

வனவாசம் செல்வதற்கு, தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும்போது மழைப் பொழிந்தது. எப்போதும் பொழியாத மழை பொழிந்துவிட்டது என்று ஆனந்தம் அடைந்தனர் ஊர்மக்கள்.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar