என் தாயே... - நி.டிஷா நித்தியானந்தம் பி.காம் முதலாமாண்டு (ஐ பிரிவு)
என் தாயே...
- நி.டிஷா நித்தியானந்தம் பி.காம் முதலாமாண்டு (ஐ பிரிவு)
உன் உயிரை வலிகளாய்த் தந்து
என்னைப் பிறக்கச் செய்தாயே...
என் வெற்றியைக் கண்டு வியந்தாயே...
வலிகளில் நான் துடித்தபோது
என்னைக் கண்டு தவித்தாயே...
என் சிரிப்பைக் கண்டு
உன் கவலைகளை மறந்தாயே...
என் சின்னச் சின்னச் செயல்களைக் கண்டு சிரித்தாயே...
எனக்காகப் பல கவலைகளைச் சுமந்தாயே...
என் உலகமே நீதான் என் தாயே...
கருத்துகள்
கருத்துரையிடுக